News August 18, 2024
நீலகிரி: ரன்னிமேடு ரயில் நிலையம் திறக்கப்படுமா?

மேட்டுப்பாளையம் – குன்னூர் ரயில் பாதையில் அமைந்துள்ளது ரன்னிமேடு ரயில் நிலையம். ஆனால் இந்த ரயில் நிலையம் தற்போது செயல்பாட்டில் இல்லை. இந்நிலையில், சோலை நடுவே அமைந்துள்ள ரன்னிமேடு ரயில் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்று, நீலகிரி மலை ரயில் ரத அறக்கட்டளை குழுவினர் நேற்று ரயில்வே வாரிய ஹெரிடேஜ் செயல் இயக்குநர் ஆஷிமா மெஹரோத்ராவிடம் வலியுறுத்தினர்.
Similar News
News November 22, 2025
நீலகிரி மக்களே இன்று கவனமா இருங்க!

நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று (நவ .22) அடுத்த 2 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், நீலகிரி மாவட்டத்திலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களே, வெளியே செல்லும்போது குடையுடன் போங்க!
News November 22, 2025
நீலகிரி: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
News November 22, 2025
நீலகிரி: 10-வது போதும்.. SUPER சம்பளத்தில் வேலை!

நீலகிரி மக்களே, அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) 1383 எழுத்தர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ITI, Diploma, Degree முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். ரூ.18,000 – ரூ.1,51,100 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <


