News August 7, 2024
நீலகிரி மாவட்ட வணிகர் சங்கத்தின் பொதுக்குழு விழா

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, குன்னூர், ஊட்டி, கூடலூர், பந்தலூர், சேரம்பாடி, குந்தா, மஞ்சூர், பந்தலூர் உட்பட்ட பகுதிகளில் உள்ள வியாபாரிகள் சங்கம் தமிழக வியாபாரிகள் சங்க பேரமைப்புடன் இணைக்கப்பட்டது. இந்த பேரமைப்பின் நடப்பாண்டுக்கான ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு விழா நாளை காலை 11 மணி அளவில் உதகை பிங்கர் போஸ்டில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக மாவட்ட தலைவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 15, 2025
நீலகிரி: ரூ.36,000 சம்பளத்தில் உள்ளூரிலேயே வேலை!

அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் குறிப்பிட்ட காலத்திற்கு திட்ட பொறியாளர் (கெமிக்கல்) என்ற பணியிடத்திற்கு 12 நபர்களை தேர்ந்தெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சம்பள விகிதம் (36,000/- +DA+HRA) விண்ணப்பிக்க கடைசி தேதி அடுத்த மாதம் 4- ம் தேதி ஆகும். மேலும் விவரங்களுக்கு http://munitionsindia.in/careers விண்ணப்பிக்கலாம்.
News September 15, 2025
நீலகிரியில் 115 சைபர் கிரைம் குற்றங்கள்!

நீலகிரியில் மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளில் 115 சைபர் கிராம் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு அவற்றில் 50 குற்றங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. பணத்தை இழந்தவர்களுக்கு மூன்று கோடி ரூபாய் வரை பெற்றுத் தரப்பட்டுள்ளது. கூகுள் ரிவியூ பண முதலீடு என்று பல்வேறு வகைகளில் இந்த மோசடி நடந்துள்ளது. இந்த வகை மோசடிக்கு 1930க்கு உடனே தொடர்பு கொள்ளலாம் என நீலகிரி சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் பிரவீணா தெரிவித்துள்ளார்.
News September 15, 2025
நீலகிரி: ரயில்வே துறையில் வேலை!

நீலகிரி மக்களே.., இந்திய ரயில்வேயில் பணிபுரிய ஆசையா..? தற்போது காலியாக உள்ள 368 ’Section Controller’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தா போதுமானது. மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். இதில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <