News August 8, 2024
நீலகிரி: மாபெரும் கல்விக்கடன் முகாம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி ஜேஎஸ்எஸ் பார்மசி கல்லூரி அரங்கில் இன்று மாபெரும் கல்விக்கடன் முகாம் நடைபெற்றது. இந்த முகமை, நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கிகள் இணைந்து நடத்தியது. முகாமிற்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமை தாங்கினார். இதில் வங்கி அதிகாரிகள் மற்றும் பலர் பங்கேற்றனர்.
Similar News
News November 17, 2025
நீலகிரி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <
News November 17, 2025
நீலகிரியில் ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

நீலகிரி மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (மருத்துவமனை பட்டியல்) மேலும் தகவல்களுக்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்க்கான உதவி எண்ணை (1800 425 3993) தொடர்பு கொள்ளுங்கள். (SHARE பண்ணுங்க)
News November 17, 2025
கோத்தகிரி அருகே அரசு பேருந்து விபத்து!

கோத்தகிரியில் இருந்து நெடுகுளா செல்லும் சாலையில் ராஜ்நகர் பகுதியில் வெட்டப்பட்ட மரத்துண்டுகளை கிரேன் மூலம் லாரியில் ஏற்றும் பணி நடந்தது. அப்போது அந்த வழியாக அரசு பஸ் சுண்டட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது கிரேன் ஆபரேட்டரின் கவனக்குறைவால் எதிர்பாராதவிதமாக கிரேனின் இரும்பு கொக்கி அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் காயம் அடைந்தனர்.


