News April 10, 2025
நீலகிரி மக்களே.. லஞ்சம் கேட்டால் இத பண்ணுங்க!

நீலகிரி மாவட்டத்தில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் பிறருக்கு சேவைகள் மற்றும் தேவைகளை நிறைவேற்ற நேரடியாகவோ, கூகுள் பே (GPay), போன்பே (Phonepe), பேடிஎம் (Paytm) போன்ற டிஜிட்டல் முறைகளிலோ, வேறு எந்த வகையிலோ லஞ்சம் கேட்டாலும் DSP ஜெயக்குமார்-94981 47234 சண்முகவடிவு (Inspector): 94981 24373 உடனடியாக தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News October 22, 2025
நீலகிரி: 5வது நாளாக இன்றும் ரத்து!

நீலகிரியில் பெய்துவரும் கனமழையால், குன்னூர் – மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டது. கனமழையால் காட்டேரி, ஹில்குரோவ் பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு தண்டவாளம் முழுமையாக மூடப்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பணி நடைபெற்று வருவதால் கடந்த 4 நாட்கள் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே இன்றும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
News October 22, 2025
நீலகிரி: மின்னொளியில் ஜொலிக்கும் மலை ரயில் நிலையம்!

குன்னூர் மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் பயணம் மேற்கொள்ள அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது குன்னூர் ரயில் நிலையம் தீபாவளி திருநாளில் கொண்டாடும் வகையில் ரயில் நிலையம் முழுவதும் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. மேலும் இரவு நேரங்களில் அற்புதமாக தெரியும் இக்காட்சிகளை குன்னூர் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் செல்போனில் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.
News October 22, 2025
நீலகிரி: மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிய எஸ்.பி!

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ம் தேதி, காவலர் வீரவணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது. நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என் எஸ் நிஷா., இன்று காவலர்கள் வீர வணக்க நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.