News October 8, 2024

நீலகிரி பொறுப்பு அமைச்சராக மு.பெ.சாமிநாதன் நியமனம்

image

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் ஒரு பொறுப்பு அமைச்சரை நியமித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும், பிற பணிகளை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, நீலகிரி மாவட்டத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Similar News

News November 20, 2024

நீலகிரி: வீரதீர செயல்புரிந்தோர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவ்யா தண்ணீரு வெளியிட்ட அறிக்கையில், வீரதீர செயல்கள் புரிந்து வரும் 13 வயதுக்கு மேல் 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள் மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும், தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் வரும் இருபதாம் தேதி முதல் டிசம்பர் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளார்.

News November 20, 2024

நீலகிரி: 346 பேர் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி

image

நீலகிரி மாவட்டத்தில் நடந்த கலை திருவிழாவில் திறமைகளை வெளிப்படுத்திய 346 மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வர்ணம் தீட்டுதல், திருக்குறள் ஒப்பிவித்தல், நாட்டுப்புற நடனம், பறை இசைத்தல் உள்ளிட்ட 84 வகை போட்டிகள் உள்ளன. வட்டார, மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் வென்ற மாணவர்கள் தற்போது மாநிலப் போட்டிக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

News November 20, 2024

நீலகிரி பழங்குடியினரை சந்திக்கும் ஜனாதிபதி

image

வரும் 27ஆம் தேதி கோவை சூலூர் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஊட்டி ராஜ்பவன் வருகிறார். அன்றைய தினம் ஓய்வு எடுக்கிறார். நவ.28ஆம் தேதி குன்னூர் வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் நடக்கும் நிகழ்வில் பங்கேற்கிறார். 29ஆம் தேதி ராஜ்பவனில் நீலகிரி பழங்குடியின மக்களை சந்திக்கிறார்.