News March 20, 2024
நீலகிரி: புலி தாக்கி மீண்டும் பசு மாடு பலி

ஓவேலியில் வன விலங்குகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட எல்லமலை பகுதியை சேர்ந்தவர் புஷ்ராஜ். இவர் வழக்கம் போல் தனது பசு மாடுகளை நேற்று ( மார்ச் 19) மேய்ச்சலுக்கு விட்டு உள்ளார். அதில் ஒரு மாடு திரும்பி வரவில்லை. இதையடுத்து தேடி சென்ற போது புலியிடம் சிக்கி பலியானது தெரிந்தது. ஏற்கனவே பந்தலூரில் பசுமாட்டை புலி வேட்டையாடி கொன்றது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 22, 2025
நீலகிரி கலெக்டர் உத்தரவு

நீலகிரி மாவட்டம் பந்தலூரை அடுத்துள்ள தேவாலாவில் அமைந்து உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் சில நாட்களுக்கு முன்பு தொழிலாளர்கள் மீது ஆபத்தான கட்டிடம் இடிந்த விழுந்தது. இதனால் ஆபத்தான கட்டிடங்களை அகற்ற கோரி முன்னாள் எம்.எல்.ஏ திராவிடமணி கலெக்டரிடம் கேட்டுக் கொண்டார். எனவே கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆபத்தான கட்டிடங்களை அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளார்.
News November 22, 2025
நீலகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று (22.11.2025) மற்றும் நாளை (23.11.2025) மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் விண்ணப்பங்கள் பெறும் முகாம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். மேலும் வாக்காளர்கள் அருகிலுள்ள வாக்குச்சாவடிகளை தொடர்புகொண்டு விரைந்து விண்ணப்பங்களை அளிக்கலாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
News November 22, 2025
நீலகிரி மக்களே இன்று கவனமா இருங்க!

நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று (நவ .22) அடுத்த 2 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், நீலகிரி மாவட்டத்திலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களே, வெளியே செல்லும்போது குடையுடன் போங்க!


