News March 20, 2024

நீலகிரி: பிரதமரை சந்தித்த வாரிய உறுப்பினர்

image

கோவை ரோட்சோவுக்கு வந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியை காண திரளானவர்கள் வாகனங்கள் மூலம் கோத்தகிரி பகுதியிலிருந்து (மார்ச் 18) சென்றனர். கோத்தகிரியை அடுத்த ஒன்னதலை கிராமத்தை சேர்ந்தவரும், முன்னாள் தேயிலை வாரிய உறுப்பினரும், மத்திய அரசு வழக்கறிஞருமான குமரன் பிரதமரை மரியாதை நிமித்தம் சந்தித்துப் பேசினார்.

Similar News

News October 20, 2025

தேயிலை தோட்டங்களில் கொப்புள நோய் தாக்கும் அபாயம்

image

நீலகிரி மாவட்டத்தில், கடந்த நான்கு நாட்களாக, கனமழை பெய்து வருகிறது. இரவு நேரங்களில் விடிய, விடிய இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால், காய்ந்து கிடந்த தேயிலை தோட்டங்களில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், மழைக்கு நடுவே, வானம் தொடர்ந்து மேகமூட்டமாக காணப்படுகிறது. போதிய சூரிய வெளிச்சம் இல்லாததால், தேயிலை தோட்டங்களில் கொப்புள நோய் தாக்கும் அபாயம் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

News October 20, 2025

கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த ஆட்சியர்

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் அவசரகால கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் கட்டுப்பாட்டு மையத்தில் தொடர்பு கொள்ளும் எண்கள் குறித்த தகவல்களை கேட்டறிந்தார். உடன் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

News October 20, 2025

நீலகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

உச்சநீதிமன்ற உத்தரவின்படி தீபாவளி தினத்தில் அனுமதிக்கப்பட்ட  ( காலை 6 மணி முதல் 7 மணி வரை,  இரவு 7 மணி முதல் 8 மணி வரை) நேரங்களில் மட்டும் பட்டாசு வெடிக்கலாம். பட்டாசு கடைக்காரர்கள் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது. உரிமம் இல்லாமல்  பட்டாசு விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு  தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!