News April 24, 2025

நீலகிரி: நாளை வேலைவாய்ப்பு முகாம்!

image

உதகை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை ஏப்.25ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் இம்முகாமில், tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் முன்பதிவு செய்த பின்னர், கல்வி மற்றும் அடையாளாச் சான்றுகளுடன் நேரில் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு 0423-2444004, 7200019666 எண்களில் தொடர்பு கொள்ளலாம். SHARE IT!

Similar News

News November 19, 2025

நீலகிரியில் பட்டதாரி இளைஞர்களுக்கு அறிய வாய்ப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் தொல்குடியினர்
புத்தாய்வு திட்டத்தின் கீழ் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு
₹10,000 நிதியுதவியும் முனைவர் மற்றும் முனைவர் பட்ட மேலாய்வாளர்களுக்கு ₹25,000 நிதியுதவியும் வழங்கபட உள்ளது. இதற்கான விண்ணப்பத்தை
www.fellowship.tntwd.org.in என்ற
இணையதள பக்கத்தில் (12/12/2025)
தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News November 19, 2025

மசினகுடி: யானை காணவில்லை

image

முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி கோட்டத்துக்கு உட்பட்ட, வாழைத்தோட்டம், மசினகுடி, சீகூர் பாலம் உள்ளிட்ட பகுதிகளில உலா வந்த ரிவால்டா, என்ற காட்டு யானையின் தும்பிக்கையில் ஏற்பட்ட காயம், கண் குறைபாடு காரணமாக, பல ஆண்டுகளாக குடியிருப்பு பகுதிகளில் முகாமிட்டு இருந்தது, வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், திடீரென யானை காணாமல் போனது. அதனை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்

News November 19, 2025

நீலகிரி மாவட்டம்: தடை அறிவிப்பு

image

நீலகிரி மாவட்டம் சுற்றுலாவிற்கு பெயர் போன மாவட்டமாக விளங்குகிறது. இந்த மாவட்டத்தில் குன்னூர் பகுதியில் அதிகமான சுற்றுலா பயணிகள் டால்பின் ஹவுஸ் மற்றும் லாம்ஸ் ராக் போன்ற சுற்றுலா தலங்களில் விரும்பி ரசிக்கின்றனர். தற்போது சுற்றுலா தலங்களில் நடைபாதை மற்றும் சாலை பணிகள் போன்ற பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சுற்றுலா பயணிகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை தடை செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!