News March 4, 2025
நீலகிரி: நடுரோட்டில் தீ பற்றி எரிந்து கார்

ஊட்டியில் இருந்து குன்னூர் நோக்கி ராஜா என்பவர் தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டு இருந்தார். இந்த நிலையில் கேத்தி அருகே வேலி வியூ பகுதியில் சென்றபோது காரில் இருந்து புகை வந்தது. உடனே சுதாரித்து கொண்ட ராஜா குடும்பத்துடன் கீழே இறங்கி, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதற்குள் கார் முழுவதும் எரிந்து கருகியது.
Similar News
News December 19, 2025
கூடலூர் அருகே லாரி – பைக் மோதி விபத்து!

நீலகிரி மாவட்டம், பந்தலூர் எருமாடு பகுதியை சேர்ந்தவர் திர்ஷியா. இவர் காலை இருசக்கர வாகனத்தில் சுயதொழில் தொடர்பான பயிற்சிக்காக கூடலூர் நோக்கி வந்துள்ளார். கோழிக்கோடு சாலை செம்பாலா அருகே லாரியை முந்திச்செல்ல முயன்றபோது, எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த திர்ஷியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கூடலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

நீலகிரி: வாக்குபதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி ஆய்வு

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக வளாகத்திலுள்ள மின்னணு வாக்குப்பதிவு சேமிப்பு கிடங்கில், வாக்குபதிவு இயந்திரங்களை பெங்களுர் பெல் நிறுவன பொறியாளர்கள் மூலம் நடைபெறும் முதல் நிலை சரிபார்க்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டார்.