News August 18, 2024
நீலகிரி: தேயிலை தோட்டத்தில் பதுங்கிய மலைப்பாம்பு!

குன்னூர் அருகே கொலக்கம்பை கோட்டக்கல் எஸ்டேட் உள்ளது. அங்குள்ள தேயிலைத் தோட்டத்தில் மலைப்பாம்பு ஒன்று பதுங்கியிருப்பதாக தொழிலாளர்கள் நேற்று வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த வனத்துறையினர், 12 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை லாவகமாகப் பிடித்து, கொலக்கம்பை அருகே அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
Similar News
News September 17, 2025
நீலகிரி: ரூ.47000 சம்பளத்தில் அரசு வேலை!

நீலகிரி மக்களே, யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC), துறையில் காலியாக Accounts Officer உள்ளிட்ட 213 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.47,600 வழங்கப்படுகிறது. இப்பணிக்கு Recruitment Test, Interview அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் ஆக்.2 தேதிக்குள் <
News September 17, 2025
நீலகிரியில் வெடிகுண்டு மிரட்டல்

ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரிக்கு, மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அறிந்து மருத்துவமனை நிர்வாகம் அதிர்ச்சியடைந்தது. உடனடியாக நீலகிரி எஸ்.பி அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இரண்டு மோப்ப நாய்கள் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் உட்பட போலீசார் சோதனை செய்ததில் வெடிகுண்டு எதுவும் இல்லை. மின்னஞ்சல் புரளி என்பதால் அனைவரும் நிம்மதி அடைந்தனர்.
News September 17, 2025
நீலகிரியில் மர்மமாக இறந்து கிடந்த புலி!

நீலகிரி மாட்டம், முதுமலை புலிகள் காப்பகம், சீகூர் வனச்சரகத்திற்குட்பட்ட உப்பல்லா ஓடைப் பகுதியில், ஐந்து வயது மதிக்கத்தக்க பெண் புலி ஒன்று இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், வேறொரு புலியுடன் ஏற்பட்ட சண்டையில் தாக்கப்பட்டதால் அந்த புலி இறந்திருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.