News January 23, 2025

நீலகிரி: தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள, கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடத்தில், இயங்கும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி காட்டும் அலுவலகத்தில், தனியார் நிறுவனங்கள் பங்கு பெறும், வேலை வாய்ப்பு முகாம் நாளை நடைபெறுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள 5ம் வகுப்பு முதல் பட்டதாரி வரை படித்தவர்கள், ஓட்டுநர் முதல் கணினி இயக்குபவர் வரை, பல்வேறு பணிகளுக்கு நேர்காணல் நடைபெறுகிறது. விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.

Similar News

News December 7, 2025

நீலகிரி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

நீலகிரி மாவட்டத்தில் உதகை ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து குந்தா ஊராட்சி ஒன்றியம் , கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து பந்தலூர் ஊராட்சி ஒன்றியம் பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர்,  கோத்தகிரி  குந்தா  கூடலூர் , பந்தலூர் ஆகிய ஆறு ஊராட்சி ஒன்றியங்கள் செயல்பட உள்ளது. இந்த தகவல் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

News December 6, 2025

ஊட்டி சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

image

நீலகிரி மலை ரயில் நிர்வாகம், சிறப்பு ரயில் சேவையை அறிவித்துள்ளது. மேட்டுப்பாளையம் – ஊட்டி இடைமேட்டுப்பாளையத்தில் காலை, 9:10 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (06171) ஊட்டியை மதியம், 2:25 மணிக்கு சென்றடையும். இயக்கப்படும் நாட்கள்: டிச., 25, 27, 29, 31. ஜன., 2,4, 15, 17, 23, 25.ஊட்டியில் இருந்து காலை, 11:25 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (06172) மாலை 4:20 மணிக்கு மேட்டுப்பாளையத்தை சென்றடையும்.

News December 6, 2025

அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

image

நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் 19.12.2025 அன்று காலை 11.00 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்; உதகமண்டலம், பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.கலெக்டர் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில்,மாவட்ட விவசாயிகள் நேரடியாக பங்கேற்று, விவசாயம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!