News May 17, 2024
நீலகிரி: டாஸ்மாக் கடைகள் மூட ஆட்சியர் உத்தரவு

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கிட்டத்தட்ட நிறைவுபெறும் சூழலில் உள்ளது. இந்நிலையில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படும் நிலையில் அன்றைய தினம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள், கிளப்கள் உள்ளிட்டவற்றை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் அருணா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Similar News
News November 2, 2025
நீலகிரி இரவு ரோந்து காவலர் விபரம்

நீலகிரி மாவட்டத்தில் இன்று (01.11.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள், நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
News November 1, 2025
நீலகிரியில் விவசாயிகள் கூட்டம் அறிவிப்பு

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள பிங்கர் போஸ்ட் கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறித்தக் கூட்டம் 21ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை 7ம் தேதி வரை தோட்டக்கலை இணை இயக்குனர், தபால் பெட்டி 72, ஊட்டி 643001 முகவரிக்கு நேரில், தபால் அல்லது
மின்னஞ்சலில் அனுப்பலாம்.
News November 1, 2025
நீலகிரி : PHONE தொலைந்து விட்டால் இத பண்ணுங்க!

நீலகிரி மக்களே உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <


