News August 10, 2024

நீலகிரி செவிலியருக்கு அமைச்சர்கள் பாராட்டு

image

உதகையில்  அரசு மருத்துவ கல்லூரி மருத்துவனையில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுற்றுலா துறை அமைச்சர் கே.ராமச்சந்திரன் ஆகியோர் இன்று ஆய்வு நடத்தினார்கள். அப்போது அமைச்சர்கள் , வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு
 தன்னலம் கருதாமல் முதலுதவி சிகிச்சை வழங்கிய செவிலியர் சபீனாவுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்து, கேடயம் வழங்கி பாராட்டினார்கள்.

Similar News

News November 7, 2025

நீலகிரியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம்

image

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் செயல்படும் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ், நவம்பர் 8-ம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, கூடலூர் செம்பாலா அருகேயுள்ள G.T.M.O மேல்நிலைப் பள்ளியில் நலத்திட்ட முகாம் நடைபெற உள்ளது. முகாமில் பல்வேறு துறைசார் மருத்துவர்கள் பங்கேற்க இருப்பதால், பொதுமக்கள் தவறாமல் வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News November 7, 2025

நீலகிரி இரவு ரோந்து போலிசாரின் விபரம்

image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, பந்தலூர், குந்தா, ஆகிய ஆறு தாலுகாக்களிலும் இன்று (06.11.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். உங்கள் பாதுகாப்பு.! எங்கள் சேவை..! என நீலகிரி மாவட்ட காவல் துறையின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது

News November 6, 2025

நீலகிரி: பட்டா வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

image

நீலகிரி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!