News April 20, 2025
நீலகிரி: சாலை விபத்தில் ஒருவர் பலி!

நீலகிரி, நிலக்கோட்டை, சுல்தாம்பத்தேரி தேசிய நெடுஞ்சாலையில், நேற்று மாலை கேரள மாநிலம் தலச்சேரியை சேர்ந்த 2 இளைஞர்கள் பைக்கில் சென்றுள்ளனர். அப்போது எதிரே வந்த அரசு பேருந்தில், பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும், மற்றவர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து, நிலக்கோட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 17, 2025
நீலகிரி: +2 முடித்தால் அரசுப் பள்ளியில் வேலை!

நீலகிரி மக்களே., மத்திய அரசின் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஏகல்வ்யா பள்ளிகளில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், ஆசிரியர், நர்ஸ், வார்டன், அக்கவுண்டன்ட் எனப் பல்வேறு பணிகள் உள்ளன. மாதம் ரூ.30,000 முதல் சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க <
News October 17, 2025
நீலகிரி: கும்கி யானைகளிடன் சிக்கிய ‘ரோலெக்ஸ்’!

கோவை சுற்று வட்டாரப் பகுதிகளில் ‘ரோலக்ஸ்’ என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்படும் ஒற்றை ஆண் காட்டு யானை தொடர்ச்சியாக கிராமங்களுக்குள் நுழைந்து பயிர்களைச் சேதப்படுத்தி வந்தது. இந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, அடர்ந்த வனப் பகுதிக்குள் விட வனத்துறையினர் முடிவு செய்து முதுமலை பகுதியில் இருந்து இரண்டு கும்கியானைகள் உதவியுடன் தொண்டாமுத்தூர் வளையம் பாளையம் பகுதியில் யானையைப் பிடித்தனர்.
News October 17, 2025
ஊட்டியில் மின்சார பிரச்னையா? இங்க போங்க!

நீலகிரி: ஊட்டி – குன்னூர் சாலையையொட்டி ஆவின் வளாகத்தில் உள்ள ஊட்டி செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று(அக்.17) காலை 11:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடைபெறுகிறது. நீலகிரி மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் சேகர் தலைமை தாங்குகிறார். இதில் மின்சாரம் சார்ந்த அனைத்து விதமான பிரச்னைகளுக்கு புகார் மனு அளிக்கலாம்.இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!