News June 28, 2024
நீலகிரி: சட்டம் ஒழுங்கு, சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம்

உதகையில் மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, வருவாய், காவல், நெடுஞ்சாலை துறை மற்றும் இதர அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
Similar News
News September 18, 2025
நீலகிரி: டிரெண்டிங் AI போட்டோ எடிட் செய்தால் அபாயம்!

நீலகிரி மக்களே.., Google Gemini பெயரில் வைரலாகும் Nano Banana Al ட்ரெண்ட் தொடர்பாக, தனிப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்களை போலியான இணையதளங்கள் அல்லது செயலிகளில் பதிவேற்ற வேண்டாம். ஒரே கிளிக்கில் உங்கள் வங்கிகணக்கு போன்ற தனிநபர் விபரங்கள் திருடப்படலாம் என சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 18, 2025
நீலகிரி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு அரசின் பெண்குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வைப்புத்தொகை பத்திரம் பெற்றவர்களில் 19 வயதை கடந்தும் முதிர்வு தொகை பெறாதவர்களின் பெயர் பட்டியல் nilgiris.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே முதிர்வு தொகை பெறாதவர்கள் மாவட்ட ஆட்சியர் கூடுதல் வளாகம், பிங்கர் போஸ்ட், உதகையில் இயங்கும் அலுவலகத்தை நேரில் அணுகுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது.
News September 18, 2025
நீலகிரி: தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க அழைப்பு!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, பந்தலூர், குந்தா, ஆகிய தாலுகாக்களில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தற்காலிக பட்டாசு கடை வைக்க விரும்புபவர்கள் வருகின்ற அக்.10ஆம் தேதிக்குள் www.tnesavai.tn.gov.in எனும் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் அல்லது இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.