News August 18, 2024

நீலகிரி: காவல்துறை போக்குவரத்து விழிப்புணர்வு

image

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா உத்திரவுப்படி இன்று போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் ஆகிய இடங்களில் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் இருசக்கர வாகன ஓட்டுநர்களிடம் தலைக்கவசம் அணியுங்கள், பாதுகாப்பாக இருங்கள் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Similar News

News November 28, 2025

நீலகிரி: வாடகை வீட்டில் வசிப்போர் கவனத்திற்கு!

image

நீலகிரியில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

News November 28, 2025

நீலகிரி: வாட்ஸ் ஆப் இருக்கா? சூப்பர் தகவல்

image

நீலகிரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 28, 2025

நீலகிரியில் அரசு பஸ் – லாரி மோதி விபத்து!

image

நீலகிரி மாவட்டம் குன்னூர்– மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை நேற்று பர்லியார் அருகே கூடலூரில் இருந்து திருச்சி செல்லும் அரசு பேருந்து, மேட்டுப்பாளையத்தில் இருந்து மேலே வரும் வாகனத்திற்கு இடம் கொடுக்க நிறுத்தி உள்ளார். அப்போது, பேருந்தின் பின்னால் வந்த சரக்கு லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் எந்த ஒரு காயமும் இன்று உயிர் தப்பினர்.

error: Content is protected !!