News November 23, 2024
நீலகிரி காவலர்களுக்கு ஆய்வு பயிற்சி

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும், வழக்குகள் சம்பந்தமான தடயவியல் மற்றும் அறிவியல் ஆய்வு பயிற்சி, காவல் கண்காணிப்பாளர் நிஷா தலைமையில் இன்று உதகையில் நடைபெற்றது. கொலை, கொள்ளை போன்ற குற்ற வழக்குகளில் காவல்துறைக்கு பெரிதும் உதவக்கூடியது தடயவியல் ஆகும். அதற்குரிய ஆய்வு பயிற்சி நடைபெற்றது.
Similar News
News November 17, 2025
நீலகிரியில் ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

நீலகிரி மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (மருத்துவமனை பட்டியல்) மேலும் தகவல்களுக்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்க்கான உதவி எண்ணை (1800 425 3993) தொடர்பு கொள்ளுங்கள். (SHARE பண்ணுங்க)
News November 17, 2025
கோத்தகிரி அருகே அரசு பேருந்து விபத்து!

கோத்தகிரியில் இருந்து நெடுகுளா செல்லும் சாலையில் ராஜ்நகர் பகுதியில் வெட்டப்பட்ட மரத்துண்டுகளை கிரேன் மூலம் லாரியில் ஏற்றும் பணி நடந்தது. அப்போது அந்த வழியாக அரசு பஸ் சுண்டட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது கிரேன் ஆபரேட்டரின் கவனக்குறைவால் எதிர்பாராதவிதமாக கிரேனின் இரும்பு கொக்கி அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் காயம் அடைந்தனர்.
News November 17, 2025
குன்னூர் பகுதியில் தடை அறிவிப்பு

குன்னூர் அருகே லேம்ஸ்ராக் மற்றும் டால்பின் நோஸ் ஆகிய சுற்றுலா காட்சி முனை இடங்களுக்கு செல்லும் சாலையில் காங்கிரீட் சாலை பணிகள் நடைப்பெறுகிறது. அதனால் சுற்றுலா வாகனங்கள் மற்றும் உள்ளூர் வாகனங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை போக்குவரத்து தடைவிதிக்கப்பட்டுள்ளது . அதையும் மீறி செல்லும் வாகனங்கள் CMS பகுதியிலேயே திருப்பி அனுப்பப்படும். இந்த சாலை பணி ஒரு வாரத்திற்கு நடைபெறுகிறது.


