News August 3, 2024
நீலகிரி: கட்டடங்கள் மண்ணில் புதைவது குறித்து ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே, கூடலூர் அருகே கோக்கால் பகுதியில் கனமழை காரணமாக 7 வீடுகளின் கட்டடங்கள் விரிசல் ஏற்பட்டு மண்ணில் புதைந்து வருகிறது. இந்நிலையில், இந்திய மண்ணியல் ஆராய்ச்சியாளர் மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் இணைந்து கட்டடங்கள் மண்ணில் புதைவது குறித்து ஆய்வு நடத்தியுள்ளனர்.
Similar News
News December 10, 2025
நீலகிரியில் 88 புதிய கிராம ஊராட்சிகள் உருவாக்கம்!

நீலகிரி மாவட்டத்தில் 88 கிராம ஊராட்சிகளை புதிதாக உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இருந்த 35 கிராம ஊராட்சிகளில் 27 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்பட்டு 88 கிராம ஊராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 9 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்படாமல் உள்ளது. இதன்படி நீலகிரியில் மொத்தம் 95 கிராம ஊராட்சிகளாக மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
News December 10, 2025
காவலரை விரட்டிய காட்டு யானை; பந்தலூரில் பரபரப்பு

பந்தலூர்: சேரம்பாடி போலீசில் காவலராக உள்ள யோகேஸ்வரன் (29), நேற்று பந்தலூர் நீதிமன்றத்துக்கு பைக்கில் சென்றார். மண்டசாமிகோவில் அருகே வனப்பகுதியில் இருந்து வந்த யானை திடீரென அவரை துரத்தியது. பைக்கை வீசி ஓடிய அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இதனையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News December 10, 2025
தொட்டபெட்டா சுற்றுலா தளத்திற்கு செல்ல தடை!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தொட்டபெட்டா மலை சிகரத்திற்குச் செல்லும் சாலையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், இன்று (டிசம்பர்.10) சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. இதனையடுத்து, தொட்டபெட்டா காட்சி மனை ஒரு நாள் தற்காலிகமாக முட்டப்பட்டதால் சுற்றுலா பயணிகள் கவலை அடைகின்றனர்.


