News August 16, 2024
நீலகிரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்

நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளி அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே, தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ளவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம். மக்களே ஷேர் பண்ணுங்க.
Similar News
News September 18, 2025
நீலகிரியில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

நீலகிரி மாவட்டத்தில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் கூடலூர் வட்டம் நெல்லியாலம் பகுதிக்கு நாளை (செப்.19) பாரிஸ் ஹாலில் முகாம் நடைபெறுகிறது. சேரங்கோடு ஊராட்சிக்கு அய்யன்கொல்லி சர்ச் ஹாலிலும், ஊட்டி வட்டம் தூனேரி கிராம ஊராட்சிக்கு அணிக்குகோரை சமுதாயக்கூடத்திலும் முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அந்தந்த முகாம்களில் அளிக்கலாம்.
News September 18, 2025
செப்.20ல் நீலகிரிக்கு வரும் எம்பி., ஆ.ராசா!

ஊட்டி தமிழக மாளிகையில் வருகிற 20ஆம் தேதி காலை 10.30 மணியளவில், வனத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு கூட்டத்தில் நீலகிரி எம்.பி. ஆ. ராசா பங்கேற்கிறார். மேலும், மாலை 4.30 மணிக்கு ஏடிசி பகுதியில் நடைபெறும் “ஓர் அணியில் தமிழ்நாடு” பொதுக்கூட்டத்திலும் அவர் உரையாற்ற உள்ளார். இந்த தகவலை மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் கே.எம். ராஜு தெரிவித்துள்ளார்.
News September 18, 2025
நீலகிரி: ஓவியத்தை கண்டு பயந்த காட்டு யானை!

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள மசினகுடி வனத்துறை சோதனைச் சாவடி அருகே சாலையை கடந்த காட்டு யானை ஒன்று சுவரில் வரையப்பட்டிருந்த யானை ஓவியத்தைப் பார்த்து, நிஜ யானை என அதிர்ச்சி அடைந்தது. முதலில் பயந்து நின்ற அந்த காட்டு யானை, அச்சத்துடன் அந்த யானை பார்த்து அச்சத்துடனே நின்றது. இக்காட்சியை அப்பகுதி வழியே சென்ற சுற்றுலாப் பயணிகள் பதிவு செய்தனர். இந்த காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.