News April 22, 2025
நீலகிரி: இன்று முதல் 5 இடங்களில் மட்டுமே!

நீலகிரி வரும் சுற்றுலா பயணிகளால் ஏற்படும் கூட்ட நெரிசல், சிக்னல் பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து, 14 இடங்களில் இ-பாஸ் சோதனை நடைபெற்றது. இந்நிலையில் அவை 5 இடங்களாக மாற்றப்பட்டுள்ளது. கல்லாறு, குஞ்சப்பனை, மசினகுடி, மேல் கூடலூர், கெத்தை ஆகிய சோதனை சாவடிகளில் மட்டும் இ-பாஸ் நடைமுறையில் இருக்கும் என நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Similar News
News December 5, 2025
நீலகிரி மக்களே முக்கிய அறிவிப்பு!

நீலகிரி கோட்ட அளவிலான தபால் குறை தீர்ப்பு கூட்டம், வரும் 8ம் தேதி காலை 10:00 மணிக்கு, நீலகிரி தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்கிறது. பொது அஞ்சல் அலுவலகத்தினால் அளிக்கப்படும் அஞ்சலக சேவைகள் குறித்து ஆலோசனைகள், குறைகள் ஏதேனும் இருப்பின் வாடிக்கையாளர்கள் அதன் விவரங்களை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளரிடம் தெரிவிக்கலாம்
News December 5, 2025
நீலகிரி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <
News December 5, 2025
நீலகிரி: வாக்காளர் பட்டியல் விபரங்கள்! EASY WAY

நீலகிரி மக்களே வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <


