News May 15, 2024
நீலகிரி: இன்று படுகர் தினம்… ஆ.இராசா வாழ்த்து

திமுக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா வெளியிட்டுள்ள அறிக்கை: திராவிட மரபினத்தின் பூர்வீக குடிகளான நீலகிரி மலை மாவட்ட படுகர் இன மக்கள் தங்களின் செம்மாந்த, கலாச்சார, நாகரிக பண்பாட்டுக்கூறுகளை பேணிக்காத்திட ஆண்டுதோறும் கொண்டாடப்படும் “படுகர் தினத்தில்” அனைவரையும் வணங்கி வாழ்த்துகிறேன் என்றார்.
Similar News
News December 4, 2025
நீலகிரி மக்களே உஷார்: வெளுக்கப்போகும் மழை!

தமிழகத்தில் வடகிழக்குப்பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,நீலகிரி மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக அவ்வப்போது கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (டிச.04), நீலகிரி மாவட்டத்திற்கு மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது. SHARE பண்ணுங்க!
News December 4, 2025
“நீலகிரியில் 3,200 பேர் பாதிப்பு” அதிர்ச்சி தகவல்

நீலகிரி மாவட்டத்தில், ஆண்டுதோறும், 3,200 பேர் கண்புரை நோயால் பாதிக்கப்படுகின்றனர், கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதியில் அதிக மக்கள் கண்புரை நோயால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, கூடலுார் கண் சிகிச்சை மையத்தை விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலவச கண் சிகிச்சை முகாம்களை நடத்தி வரும், கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்ரமணியம் தெரிவித்தார்.
News December 4, 2025
உதகை: பனியின் தாக்கத்தால் விவசாயம் பாதிப்பு

உதகை பகுதியில் பனியின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க, விவசாயிகள் ஸ்பிரிங்லர் முறையில் கேரட் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி பராமரித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் மலை தோட்ட காய்கறிகளில் கேரட் விவசாயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது பனியின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மலை தோட்ட காய்கறிகள் பாதிப்படைந்து வருகின்றன.


