News September 12, 2024
நீலகிரி ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு 14ஆம் தேதி காலை 9.30 முதல் 12.30. வரை நடக்கிறது. தேர்வில் 3610 பேர் பங்கேற்கின்றனர். இந்த தேர்வை முறையாக தடையின்றி நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமையில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் காவல்துறை, வருவாய்த்துறை உள்பட பல்வேறு துறை அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
Similar News
News February 19, 2026
கூடலூர் அருகே விபத்து!

கூடலூர் வட்டம் முதுமலை கிராமம் தொரப்பள்ளி இருந்து தெப்பகாடு செல்லும் சாலையில் TN24AW2057 எண் கொண்ட சரக்கு வாகனம், நிலை தடுமாறி கவிழ்ந்துள்ளது. அங்கு இருந்த மக்கள் ஓட்டுநரை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த கூடலூர் போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்து வருகின்றனர்.
News February 19, 2026
நீலகிரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நான்காவது தளத்தில் நாளை (பிப். 20) காலை 9 முதல் மாலை 5 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்களும், வேலை தேடுவோரும் <
News February 18, 2026
நீலகிரி: பிறப்பு, இறப்பு சான்று வேண்டுமா? Hi போதும்!

நீலகிரி மக்களே, இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவதுறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். (SHARE பண்ணுங்க)


