News August 18, 2024

நீலகிரி: ஆக்கிரமிப்பை அகற்றி வன நிலம் மீட்பு

image

நீலகிரி: பந்தலூர் அருகே பாட்டவயல் சோதனை சாவடி அருகே வன நிலத்தை சந்தோஷ் என்பவர் ஆக்கிரமித்து ஓட்டல் கட்டி நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் வன நிலத்தில் கட்டிடம் கட்டியது தவறு என்றும், அதை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதன் பேரில், பந்தலூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, அதிகாரிகளுடன் நேற்று சென்று ஆக்கிரமிப்புக் கடையை அகற்றினர்.

Similar News

News October 26, 2025

நீலகிரி: உங்க பெயரை மாற்றனுமா? SUPER CHANCE

image

நீலகிரியில் உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இணையத்தில் விண்ணப்பிக்க இங்கு<> கிளிக் செய்யவும்<<>>. தமிழில் பெயர் மாற்ற ரூ.150, ஆங்கில பெயர் மாற்ற ரூ.750 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. (SHARE பண்ணுங்க)

News October 26, 2025

ஊட்டியில் வீடு புகுந்து..! அச்சத்தில் மக்கள்

image

உதகையைச் சேர்ந்தவர் சிக்கம்மாள். இவர் தனியா வசித்து வருகிறார். இவரது வீட்டுக்கு கடந்த சில நாள்களுக்கு முன் பெண் ஒருவர் வந்து வீட்டு வேலைகளை செய்து கொடுப்பேன் என கூறியுள்ளார். இதை நம்பிய சிக்கம்மாள், அவருக்கு காபி கொண்டு வருவதற்காக சமையலறைக்கு சென்றார். அப்போது, அப்பெண் மூதாட்டியின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி நகையை பறித்துச்சென்றார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

News October 26, 2025

பந்தலூரில் இப்படியா?

image

நீலகிரி, பந்தலூர் பகுதியில் உள்ள முதுமலை பென்னை பழங்குடியின அரசு ஆரம்பப் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்
அமர இருக்கைகள் இல்லாததால் மாணவர்கள் தரையில் அமரும் அவலம் ஏற்பட்டுள்ளது. தற்போது நிலவும் குளிர் காலநிலையில் மாணவர்கள் தரையில் அமர்வது அவர்களுக்கு உடல்நல சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே இப்பள்ளிக்கு இருக்கை வழங்க பொதுமக்கள் அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

error: Content is protected !!