News August 2, 2024

நீலகிரியில் 1,12,750 மகளிருக்கு உரிமைத் தொகை

image

நீலகிரி ஆட்சியர் லட்சுமி திவ்யா தண்ணீரு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் குன்னூர் வட்டத்தில் 19,332 பேர், கூடலூரில் 22,950 பேர், கோத்தகிரியில் 16,263 பேர், குந்தாவில் 6,718 பேர், பந்தலூரில் 20,019 பேர், உதகையில் 27,468 என மொத்தம் 1,12,750 மகளிருக்கு மாதம் ரூ.1000 உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News November 27, 2025

நீலகிரி: ஈஸியா பட்டா பெறுவது எப்படி?

image

நீலகிரி மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)

News November 27, 2025

நீலகிரி: இந்த பகுதிகளில் மின்தடை அறிவிப்பு!

image

நீலகிரி மாவட்டம் கட்டபெட்டு துணை மின் நிலையத்தில் (1/12/25)-ம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கட்டபெட்டு துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட ஓரசோலை, கக்குச்சி, திருசசிக்கடி,
தும்மனட்டி, இடுஹட்டி, பாக்கியா நகர், நடுஹட்டி, கூக்கல், தூனேரி உள்ளிட்ட இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

News November 27, 2025

நீலகிரி மக்களுக்கு முக்கிய தகவல்!

image

நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே, வன விலங்குகள் நடமாட்டம், விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க வனத்துறை சார்பில் 1800-425-4343 என்ற உதவி எண் பயன்பாட்டில் உள்ளது. பொதுமக்கள் வனவிலங்கு தொடர்பான குறைகளை உடனுக்குடன் தெரிவிக்கலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!