News April 22, 2025
நீலகிரியில் வேலைவாய்ப்பு முகாம்

நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் மூலமாக, தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 25.04.2025 அன்று காலை 10 மணி முதல், உதகையில் உள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில் நெறிவழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெற உள்ளது. 10, 12, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் கலந்து கொள்ளவும். ஷேர் பண்ணுங்க.
Similar News
News September 18, 2025
செப்.20ல் நீலகிரிக்கு வரும் எம்பி., ஆ.ராசா!

ஊட்டி தமிழக மாளிகையில் வருகிற 20ஆம் தேதி காலை 10.30 மணியளவில், வனத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு கூட்டத்தில் நீலகிரி எம்.பி. ஆ. ராசா பங்கேற்கிறார். மேலும், மாலை 4.30 மணிக்கு ஏடிசி பகுதியில் நடைபெறும் “ஓர் அணியில் தமிழ்நாடு” பொதுக்கூட்டத்திலும் அவர் உரையாற்ற உள்ளார். இந்த தகவலை மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் கே.எம். ராஜு தெரிவித்துள்ளார்.
News September 18, 2025
நீலகிரி: ஓவியத்தை கண்டு பயந்த காட்டு யானை!

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள மசினகுடி வனத்துறை சோதனைச் சாவடி அருகே சாலையை கடந்த காட்டு யானை ஒன்று சுவரில் வரையப்பட்டிருந்த யானை ஓவியத்தைப் பார்த்து, நிஜ யானை என அதிர்ச்சி அடைந்தது. முதலில் பயந்து நின்ற அந்த காட்டு யானை, அச்சத்துடன் அந்த யானை பார்த்து அச்சத்துடனே நின்றது. இக்காட்சியை அப்பகுதி வழியே சென்ற சுற்றுலாப் பயணிகள் பதிவு செய்தனர். இந்த காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
News September 18, 2025
நீலகிரி: வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே படைச்சேரி பகுதியில் ஒற்றை காட்டு யானை முகாமிட்டு இருந்தது. இந்த யானை, தேவதாஸ் என்பவருக்கு சொந்தமான வீட்டின் அருகே, காபி மரங்களை சேதப்படுத்தியது. அப்போது, பாக்கு மரம் வீட்டு கூரை மீது விழுந்ததில் சேதம் ஏற்பட்டது. வீட்டினுள் அறையில் யாரும் இல்லாததால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படவில்லை. தகவல் அறிந்த சேரம்பாடி வனச்சகர் அய்யனார் நேரில் ஆய்வு செய்தார்.