News August 14, 2024
நீலகிரியில் வருவாய் இழப்பு

நீலகிரி மாவட்டம் சுற்றுலா வருவாயை நம்பியிருக்கும் மாவட்டமாகும். வயநாடு சம்பவத்திற்கு பிறகு நீலகிரி மாவட்டத்திற்கு வரும் கேரளா சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. சுற்றுலா தலங்களில் கூட்டம் குறைவாக உள்ளதால் சுற்றுலாவை மட்டுமே நம்பி உள்ள விடுதி உரிமையாளர்கள், வியாபாரிகள், பூங்காக்களில் உள்ள புகைப்படக் கலைஞர்கள் வருவாய் இழந்ததுடன் மாற்றுத் தொழிலை நாடி செல்லும் சூழ்நிலை நிலவுகிறது.
Similar News
News September 12, 2025
நீலகிரியில் பாடகர் ஹரிஹரனுடன் கலைஞர்கள் சந்திப்பு!

நீலகிரியில் நடந்த தனியார் அமைப்பின் நிகழ்ச்சியில் பிரபல சினிமா பாடகர் ஹரிஹரன் பங்கேற்றார். அப்போது, அவர் தனது பாடல்களை பாடி அங்கிருந்தவர்களை மகிழ்வித்தார். நீலகிரி கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் இசைக்கலைஞர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்த ஹரிஹரன் உடன் புகைப்படம் எடுத்து, அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
News September 12, 2025
ஊட்டி கடையில் 15செல்போன்கள் திருட்டு

உதகை நகராட்சி சந்தை அருகில் அமைந்திருக்கும் சேட் மருத்துவமனை அருகில் இருக்கும் ஒரு கடையில் இரவு நேரத்தில் கூரையை பிரித்து கடைக்குள் புகுந்து 15க்கும் மேற்பட்ட செல்போன்களை திருடிச் சென்றதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இடையே அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறையினர் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
News September 12, 2025
நீலகிரியில் யானை மர்ம மரணம்?

நீலகிரி முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி கோட்டம், சிங்காரா வனச்சரகம், சிங்காராபிரிவு, நார்த்தன் காப்புக்காடு நாயக்கன் கோட்டை மலை சரிவு பகுதிகளில் வனப்பணியாளர்கள் ரோந்து சென்று வரும்போது ஒரு யானை குட்டி இறந்து கிடந்தது. கண்டுபிடிக்கப்பட்டு இறந்த குட்டி யானையின் மலை சரிவிலிருந்து விழுந்து இறந்திருக்கலாம் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பின் அதே இடத்தில் புதைக்கப்பட்டது.