News March 3, 2025
நீலகிரியில் மார்ச் 31 கடைசி நாள்

தமிழ்நாட்டில் நியாயவிலை கடைகளில் மார்ச் 31 வரை வேட்டி,சேலையை பெற்றுக் கொள்ளலாம். பொங்கல் வேட்டி, சேலைகளை இதுவரை வாங்காதவர்கள் மார்ச் 31க்குள் ரேஷன் கடைக்கு சென்று பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் கூடலூர் பந்தலூர் ஊட்டி ஆகி தாலுகாவில் உள்ள வேட்டி, சேலை வாங்காதவர்கள் மார்ச் 31க்குள் வாங்கிக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News October 24, 2025
நீலகிரிக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

வடகிழக்கு பருவமழையின் தொடர்ச்சியால் நீலகிரி மாவட்டம் 6 தாலுகாக்களிலும் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களின் அவசர உதவி எண்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசர தேவைகளுக்காக மேற்கண்ட எண்களை அழைக்கலாம் என தகவல் வழங்கப்பட்டுள்ளது.
News October 23, 2025
உதகையில் இன்று புத்தகத் திருவிழா!

உதகையில் 2025ஆம் ஆண்டுக்கான புத்தகத் திருவிழா, உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. இப் புத்தகத் திருவிழா இன்று (அக்டோபர் 24) தொடங்கி, நவம்பர் 2ஆம் தேதி வரை நடைபெறுகிறது. காலை 10 மணிக்குத் துவங்கும் இந்தக் கண்காட்சி இரவு 7 மணி வரை நடைபெறும். இந்தப் புத்தகக் கண்காட்சியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
News October 23, 2025
நீலகிரி: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

நீலகிரி வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.


