News August 7, 2024

நீலகிரியில் புவியியல் துறை 20 நாள் ஆய்வு

image

நீலகிரியில் கனமழையால் கூடலூர் அருகே கோக்கால் பகுதியில் வீடுகள், முதியோர் இல்ல கட்டடம், சாலை போன்றவற்றில் வெடிப்பு ஏற்பட்டு சேதமடைந்தது. இந்த நிலையில் மத்திய புவியியல் துறை 2 அதிகாரிகள் சென்னையில் இருந்து நேற்று மாலை கூடலூர் வந்தனர். பின்னர் இன்று முதல் 20 நாட்கள் ஆய்வு பணி நடைபெறும் என தெரிவித்தனர்.

Similar News

News January 1, 2026

நீலகிரி: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றனுமா?

image

உங்களது இடம் (அ) வீடு கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு<> க்ளிக் <<>>செய்து பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தலை தேர்ந்தெடுத்து தனிபட்டாவாக மாற்ற பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். (SHARE)

News January 1, 2026

BREAKING: நீலகிரி கலெக்டர் அதிரடி உத்தரவு

image

கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் பரவி உள்ளதால், நீலகிரி மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீலகிரி ஆட்சியர் தெரிவிக்கையில் பறவை காய்ச்சல் நோய்க்கு, சிகிச்சை அல்லது தடுப்பு மருந்து தற்போது இல்லை என்பதால், கேரளா மாநிலத்தில் இருந்து கோழிகள், முட்டைகள், கோழியின எச்சம் மற்றும் கோழி தீவனங்கள் வாகனங்களில் ஏற்றி வருவது, மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

News January 1, 2026

கூடலூரில் சுட்டு தற்கொலை

image

கூடலுார் புத்துார்வயல் அருகே வடவயல் பகுதியை சேர்ந்தவர் குட்டிகிருஷ்ணன். தனது வீட்டில் தனியாக தங்கி இருந்தார். நேற்று காலை, அவரின் மைத்துனர் வீட்டுக்கு வந்து பார்த்த போது, முன் அறை இருக்கையில் நாட்டு துப்பாக்கியுடன் அமர்ந்தபடி முகத்தில்பலத்த காயத்துடன் இறந்து கிடந்தது தெரியவந்தது. போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், குடும்ப பிரச்னை காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என வந்துள்ளது.

error: Content is protected !!