News April 1, 2025
நீலகிரியில் நாளை 24 மணி நேர கடையடைப்பு போராட்டம்

நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை ரத்து, சில்ஹல்லா மின் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உட்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஏற்கனவே அறிவித்தது போல், நாளை 24 மணி நேரம் கடை அடைப்பு நடைபெறும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின், நீலகிரி மாவட்ட தலைவர் முகமது பரூக் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 7, 2025
நீலகிரியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம்

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் செயல்படும் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ், நவம்பர் 8-ம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, கூடலூர் செம்பாலா அருகேயுள்ள G.T.M.O மேல்நிலைப் பள்ளியில் நலத்திட்ட முகாம் நடைபெற உள்ளது. முகாமில் பல்வேறு துறைசார் மருத்துவர்கள் பங்கேற்க இருப்பதால், பொதுமக்கள் தவறாமல் வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
News November 7, 2025
நீலகிரி இரவு ரோந்து போலிசாரின் விபரம்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, பந்தலூர், குந்தா, ஆகிய ஆறு தாலுகாக்களிலும் இன்று (06.11.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். உங்கள் பாதுகாப்பு.! எங்கள் சேவை..! என நீலகிரி மாவட்ட காவல் துறையின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது
News November 6, 2025
நீலகிரி: பட்டா வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

நீலகிரி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)


