News August 6, 2024
நீலகிரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

நீலகிரி மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 16.08.2024 அன்று நடைபெறவுள்ளது. இதற்காக கூடுதல் ஆட்சியர் வளாகம் பகுதியில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் அணுகலாம். அல்லது 0423-2444004, 7200019666 என்ற எண்கள் வாயிலாக தொடர்பு கொள்ளலாம். இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரூ தெரிவித்துள்ளார்.
Similar News
News October 23, 2025
நீலகிரி மக்களே: அவசர உதவி எண் அறிவிப்பு!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, குந்தா, பந்தலூர், ஆகிய 6 தாலுகாவிலும் பருவமழை மற்றும் இயற்கை பேரிடர்களால் ஏற்படும் மண் சரிவு போக்குவரத்து பாதிப்பு மற்றும் உடனடியாக தகவல் தெரிவிக்க நீலகிரி மாவட்டத்தில் உள்ள கட்டுப்பட்டறைக்கு 1077 என்று கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் அழைக்கலாம் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.
News October 23, 2025
குன்னூர் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

நீலகிரி, குன்னூரில் வரும் (அக்டோபர் 25) அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதில் 17க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்கின்றனர். பொதுமக்கள் ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளை கொண்டு முகாமிற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
News October 23, 2025
நீலகிரி: குடியிருப்பு மீது விழுந்த ராட்சத பாறை!

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆப்பிள் பீ ரோடு பகுதியில் உள்ள பிரவீன் குமார் என்பவரது வீட்டின் மீது, ராட்சத பாறை விழுந்து, வீட்டில் ஒரு பகுதி சேதம் அடைந்து உள்ளது. மேலும் தமிழ்நாடு பேரிடர் மீட்புக் குழு அப்பகுதிக்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.