News November 15, 2024

நீலகிரியில் கடுமையான குளிர்

image

கோத்தகிரியில் இருந்து கோடநாடு, கீழ் கோத்தகிரி, சோலூர் மட்டம், நெடுகுளா, கேர்கம்பை, பேரகனி, கர்சன் உள்ளிட்ட பகுதியில் தொடர் மழையை அடுத்து கடும் குளிருடன் மேக மூட்டமான காலநிலை நிலவி வருகிறது. இதனால் கடந்த 2 நாட்களாக அரசு பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் முன் விளக்கை எரியவிட்டபடி செல்கின்றன. நகரில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

Similar News

News November 19, 2024

ஜனாதிபதி வருகை முன்னேற்பாடு பணிகள் ஆய்வு கூட்டம்

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரூ அவர்கள் தலைமையில் இன்று கூட்டம் நடைபெற்றது. அதில் இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு அவர்கள் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

News November 19, 2024

குன்னூர் மலைப்பாதையில் பேருந்து விபத்து

image

குன்னூர் மலைப்பாதையில் காட்டேரி அருகே தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான சொகுசு பேருந்து மேல் நோக்கி வரும் வழியில் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது. ரோட்டின் அருகே உள்ள தடுப்பின் மீது ஏறி நிற்கிறது. தகவல் கிடைத்த காவல்துறை மற்றும் மீட்புப்படை அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் விபத்து பகுதிக்கு விரைந்துள்ளனர்.

News November 19, 2024

நீலகிரி மாவட்டத்தில் கிராமசபை கூட்டம்

image

நீலகிரி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் வரும் 23 தேதி உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. அந்தந்த ஊராட்சி தலைவர்கள் தலைமையில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். இந்த தகவலை நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவியா தெரிவித்துள்ளார்.