News April 28, 2025
நீலகிரியில் கடன் உதவி ரெடி: அரசு வழங்கும் சூப்பர் வாய்ப்பு!

நீலகிரி மாவட்டத்தில் முதல் தலைமுறை தொழில் முனைவோர்களுக்காக நீட்ஸ் எனப்படும் மாவட்ட தொழில் மையம் மூலம் கடன் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. சுயதொழில் தொடங்குபவர்கள் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 8925533996,8925533997 அல்லது 0423-2443947 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த தகவலை ஷேர் செய்யுங்கள்.
Similar News
News January 10, 2026
BREAKING: ஊட்டி பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

ஊட்டியில் இருந்து தங்காடு கிராமத்திற்கு கடந்த 7-ம் தேதி 36 பயணிகளுடன் சென்ற மினிபேருந்து மணவாடா பகுதியில் கட்டுப்பாட்டு இழந்த விபத்திற்கு உள்ளாது. இதில், பேருந்தில் பயணித்தவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த பவளம் என்ற பெண்மணி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்தார்.
News January 10, 2026
நீலகிரியில் 2 நாள்கள் மதுக்கடை மூடல்! அதிரடி உத்தரவு

நீலகிரியில் ஹெத்தையம்மன் திருவிழா நடந்து வருகிறது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் கட்டபெட்டு ஒன்னதலை இடையே, பங்களோரை சின்னிஸ் கட்டடம் அருகே சாலை ஓரத்தில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. தற்போது, இத்திருவிழாவில் திரளானோர் பங்கேற்கவுள்ளதால் இன்று (ஜன.10), நாளை (ஜன.11) மதுக்கடை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
News January 10, 2026
நீலகிரி: இரவு ரோந்து போலீஸ் விவரம்

நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு முதல் நாளை காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளது. உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள், நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.


