News August 11, 2024
நீலகிரியில் இருசக்கர வாகன ஆம்புலன்ஸ்!

நீலகிரி: உதகையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “நாட்டிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் நீலகிரி, ஏற்காடு, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில், சாலை வசதி இல்லாத இடங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக, அதிநவீன வசதிகளுடன் 25 இருசக்கர வாகன ஆம்புலன்ஸ் சேவை விரைவில் தொடங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
Similar News
News September 19, 2025
நீலகிரியில் வரும் 28ம் தேதி டிஎன்பிஎஸ்சி தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வு ஆனது வருகின்ற 28ஆம் தேதி நடைபெற உள்ளது. குன்னூரில் சிம்ஸ் பார்க் அருகில் உள்ள புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி ஒரு தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் தேர்வு நடைபெறும் நாள் அன்று காலை 8:30 – 9 மணிக்குள் தேர்வு மையத்திற்குச் செல்ல டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது.
News September 19, 2025
நீலகிரி: ஆட்கொல்லி யானைக்கு ரேடியோ காலர் பொருத்த தயார்

கூடலூர் ஓவேலி வனப்பகுதியில், மனித-யானை மோதலை ஏற்படுத்தி வரும் யானையைப் பிடிக்க, சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 60-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள், நான்கு கும்கி யானைகள் மற்றும் ட்ரோன் கேமரா உதவியுடன் யானையைப் பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பிடிக்கப்படும் யானைக்கு பொருத்துவதற்காக ரேடியோ காலரும் தயார் நிலையில் உள்ளது.
News September 19, 2025
நீலகிரி: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, பந்தலூர் மற்றும் குந்தா ஆகிய ஆறு உட்கோட்டங்களிலும் இன்று (18.09.2025) இரவு ரோந்துப் பணிக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் குறித்து நீலகிரி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. ஏதேனும் உதவி தேவைப்பட்டால், நீங்கள் நேரடியாக சம்பந்தப்பட்ட அதிகாரியைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 என்ற எண்ணை அழைக்கலாம்.