News August 3, 2024
நீலகிரிக்கு உதவி எண்கள் அறிவிப்பு

நீலகிரியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. எனவே நீலகிரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பாக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மழைபாதிப்புக்கு 24 மணிநேரமும் செயல்படும் 0423-2444111, 9498101206, 9789800199 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று காவல்துறையினர் மற்றும் மாவட்ட தனிப்பிரிவு அலுவலம் தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 15, 2025
நீலகிரி: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News November 15, 2025
நீலகிரி: ஆதார் அட்டையில் திருத்தமா?

நீலகிரி மக்களே, “ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நேற்று (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <
News November 15, 2025
கோத்தகிரி அருகே பெண்ணை தாக்கிய கரடி!

கோத்தகிரி அருகே உள்ள ஓமக்குழி கிராமத்தில் உள்ள தனியார் தேயிலை எஸ்டேட்டில் தங்கி கூலி வேலை செய்து வருபவர் நேபாள நாட்டை சேர்ந்த பெண் தொழிலாளி தேவி(60). இவர் இன்று காலை மேல் தட்டப்பள்ளம் பகுதியில் தேயிலை பறிக்கும் பணியில் இருந்தபோது, புதர் மறைவில் இருந்து வெளியே வந்த கரடி தாக்கி காயமடைந்தார். இவருக்கு கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


