News January 23, 2025

நீர்நிலை காப்பாளர் விருதிற்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தென்காசி மாவட்டத்தில் நீர்நிலைகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தனி நபர்கள், அறக்கட்டளைகள் மற்றும் சமூக அமைப்புகளின் பங்களிப்பை அங்கீகரித்து விருது வழங்கப்பட உள்ளது. விருதினை <>இங்கே Click செய்து <<>> ஜனவரி 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.•உங்கள் சமூக ஆர்வலர் நண்பர்களுக்கு பகிரவும்*

Similar News

News August 9, 2025

ஆகஸ்ட் 15ம் தேதி கருப்புக் கொடி போராட்டம் அறிவிப்பு

image

பழைய குற்றாலம் அருவியை விவசாயிகளுடைய பயன்பாட்டிற்காக 24 மணி நேரமும் திறக்க வேண்டும். மீண்டும் பொதுப்பணித்துறை உடைய கட்டுப்பாட்டிற்கு அருவியை ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கங்களின் சார்பில் வரும் ஆகஸ்ட் 15 அன்று மலையோர கிராம பகுதிகளில் கருப்புக்கொடி கட்டிப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

News August 9, 2025

தென்காசி அருகே கரடியை தேடும் ட்ரோன்

image

புளியங்குடி பகுதியில் விவசாயி பணிக்கு சென்ற பெண்களை கரடி கடித்து படுகாயம் அடைந்த நிலையில் கரடியை பிடிக்க 3ஆவது நாளாக வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். மாவட்ட வனத்துறை அலுவலர் அகில் நல்ல தம்பி தலைமையில் ட்ரோன் கேமராக்கள் உதவியுடன் 30க்கும் மேற்பட்ட வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு 3ஆவது நாளாக கரடி நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

News August 9, 2025

தென்காசியில் ரக்க்ஷா பந்தன் விழா

image

தென்காசியில் ரக்க்ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு ரக்க்ஷா அணிவிக்கும் விழா நேற்று இரவு நடைபெற்றது. இதில் தென்காசி மாவட்ட பாஜக துணைத் தலைவர் முத்துக்குமாருக்கு தென்காசி மாவட்ட ரக்க்ஷா பந்தன் குழுவினர் நேரில் சந்தித்து ரக்க்ஷா அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதில் பாஜக நிர்வாகிகள் மற்றும் ரக்க்ஷா பந்தன் குழுவினர் உட்பட பலர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!