News August 7, 2024
நீரில் மூழ்கி மூன்று குழந்தைகள் உயிரிழப்பு

கோனேரிகுப்பம் கிராமத்தில் இன்று நாவல் பழம் பறிக்க அப்பகுதியிலுள்ள ஓடையை கடந்து செல்ல முயன்ற 3 குழந்தைகள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அப்பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரின் மகன் சஞ்சய் மற்றும் மாரிமுத்து என்பவரின் மகள்கள்
பிரியதர்ஷினி, சுபஸ்ரீ ஆகிய மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஒலக்கூர் போலிசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 5, 2025
விழுப்புரம்: கடலில் குளித்த கல்லூரி மாணவர் பரிதாப பலி!

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அடுத்த பொம்மையார்பாளையம் கடற்கரையில் கல்லூரி மாணவர் முத்துச்செல்வன் நேற்று கடலில் குளித்து கொண்டிருந்துள்ளார். அப்போது மாணவர் முத்துச்செல்வன் எதிர்பாராத விதமாக அலையில் இழுத்துச் செல்லப்பட்டார். இதில், மாணவர் முத்துச்செல்வன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்த நிலையில், அவர் சென்னையில் கல்லூரி படித்து வருவது தெரியவந்துள்ளது.
News December 5, 2025
விழுப்புரம்: முன்னாள் காதலியை கடத்திய சட்டக்கல்லூரி மாணவன்!

விழுப்புரம்: சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண், அம்பத்தூர் சட்டக்கல்லூரி மாணவர் ஷாம் ஷங்கரை (23) காதலித்து வந்துள்ளார். கருத்து வேறுபாட்டால் பிரிந்த நிலையில், ஷாம் அந்த பெண்ணை மீண்டும் காதலிக்கும் படி வற்புறுத்தியுள்ளர். இந்நிலையில், நேற்று ஷாம் தனது நண்பர்களுடன் அந்த பெண்ணை காரில் கடத்தி வந்துள்ளார். அப்போது, அவர்களை விக்கிரவாண்டி போலீசார் அதிரடியாக மடக்கி பிடித்து பெண்ணை மீட்டனர்.