News March 5, 2025
நீரில் மூழ்கி மாணவன் தலைமை ஆசிரியர் உயிரிழப்பு

ஓசூர் அருகே பாகலூர் பக்கம் உள்ள எழுவப்பள்ளி கிராமத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவன் நிதின் (08) மதிய உணவு இடைவேளையில் பள்ளியின் பின்புறத்தில் விவசாய நீர் சேமிப்பு தொட்டிக்குள் விழுந்துள்ளான். அவனை பள்ளி தலைமை ஆசிரியர் கௌரிசங்கர் ராஜா காப்பாற்ற சென்றபோது அவரும் மாணவனும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து பாகலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 14, 2025
கிருஷ்ணகிரி: 108 ஆம்புலன்சில் பிறந்த பெண் குழந்தை

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள காட்டுர் கிராமத்தைச் சேர்ந்த மீனா என்பவருக்கு இன்று காலை 1.28 மணி அளவில் பிரசவவலி ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனை செல்லும் வழியில் செவிலியர் சந்தோஷ் உதவியுடன் 108 ஆம்புலன்ஸில் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தாய், சேய் இருவரும் நலமாக உள்ளனர். அவர்கள் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
News September 14, 2025
கிருஷ்ணகிரி: ஆன்லைனில் ஆர்டர் செய்பவரா நீங்கள்?

ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க
✅ நம்பகமான தளங்களில் மட்டுமே பொருட்களை வாங்கவும்
✅ Cash on Deliveryயை தேர்வு செய்யலாம்
✅ Return Policy, Customer Reviews, Seller Ratings ஆகியவற்றை சரிபார்க்கவும்
✅ மோசடி ஏற்பட்டால் உடனே புகார் செய்யவும்,
நிறுவனத்திடமிருந்து பதில் கிடைக்கவில்லை என்றால் காலம் தாழ்த்தாமல் மாவட்ட நுகர்வோர் ஆணையம் அல்லது <
News September 14, 2025
பாதுகாப்பு வளையத்திற்குள் கிருஷ்ணகிரி!

கிருஷ்ணகிரி அரசு விழாவில் கலந்துகொள்ளவுள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பாதுகாப்புக்காக, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 1,500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமார் தலைமையில் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி எஸ்.பி. தங்கதுரை இந்த பணிகளை மேற்பார்வையிடுகிறார்.