News April 15, 2025
நீரில் மூழ்கி இறந்த 3 சிறுவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் நிதி உதவி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், காட்டுமன்னார்கோயில் அருகே வடக்கு கொளக்குடியில் வெள்ளியங்கால் ஓடையில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இச்சம்பவத்தில் இறந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன், என கூறப்பட்டுள்ளது.
Similar News
News November 21, 2025
கடலூர்: தவறி விழுந்த கொத்தனார் சாவு

ஆண்டிபாளையத்தைச் சேர்ந்த ஆனந்தன் (35). கொத்தனார் வேலை செய்து வந்த இவர் நேற்று தனது நண்பர் குமரனுடன் தவளக்குப்பத்துக்கு வேலைக்குச் சென்று விட்டு, மாலை டூவீலரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது மிளகாய் குப்பம் அருகே ஆனந்தன் திடீரென டூவீலரில் இருந்து தவறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 21, 2025
கடலூர்: சிறையில் கைதி திடீர் சாவு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(58). இவர் கடலூர் மத்திய சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் காச நோயால் பாதிக்கப்பட்டிருந்த பாலகிருஷ்ணன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி நேற்று(நவ.20) உயிரிழந்தார். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 21, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று(நவ.20) இரவு 10 மணி முதல் இன்று(நவ.21) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


