News April 11, 2025
நீரில் மூழ்கி இரு மாணவர்கள் பலி

எண்ணூர் மற்றும் படப்பை அருகே 2 வேதனையூட்டும் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. கடல் மற்றும் ஏரியில் நீரில் மூழ்கி 11 வயது சிறுவர்கள் சாய்மோனிஷ் மற்றும் சோஜான் ஆகியோர் நேற்று (ஏப்ரல் 10) உயிரிழந்தனர். சாய்மோனிஷ், தாழங்குப்பம் கடற்கரையில் அலையில் சிக்கி உயிரிழந்தார். சோஜான், ஆதனூர் ஏரியில் மீன் பிடிக்க சென்றபோது மூழ்கி உயிரிழந்தார். இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 16, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் விவரம் காவல் நிலையம் வாரியாக மக்களுக்கு எளிய தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர உதவி, பாதுகாப்பு, குற்றநிகழ்வுகள் தடுப்பு மற்றும் ரோந்து சம்பந்தமான தகவல்களை பெற இந்த விவரங்களை பயன்படுத்தலாம். வேலைக்கு செல்லும் தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க
News November 16, 2025
கார் பார்க்கிங் செய்யும் போது நேர்ந்த சோகம்

ஆவடியில் வீட்டின் பார்க்கின் பகுதியில் கணவரின் கவனமின்மையால் கார் மோதி அவருடைய மனைவி இந்துமதி என்பவர் உயிரிழந்தார். காருக்கு ரிவர்ஸ் பார்க்க சென்ற போது காருக்கும், சுவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு படுகாயம் அடைந்த மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News November 16, 2025
திருவள்ளூர்: 10th தகுதி.. எய்ம்ஸ்-ல் வேலை ரெடி!

திருவள்ளூர் மக்களே,எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1353 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச.2-க்குள்<


