News October 23, 2024
நீதிமன்ற வழக்குரைஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

வழக்குரைஞர்களுக்கு எதிராக சுற்றறிக்கை விட்டுள்ள தமிழ்நாடு டி.ஜி.பி. மீது உரிய நடவடிக்கை எடுத்து, மேற்படி சுற்றறிக்கையை தமிழ்நாடு அரசும், காவல்துறையும் திரும்பபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, செங்கல்பட்டு வழக்கறிஞர்கள் சங்கம் (சி.பி.ஏ.) சார்பில் சங்கத்தின் தலைவர் ஆனந்தீஸ்வரன் தலைமையில், நீதிமன்ற நுழைவு வாயிலில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Similar News
News November 16, 2025
செங்கல்பட்டு: வெற்றிலை, சாக்பீஸில் இப்படி ஒரு சாதனையா?

செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்தபுரம் அரசு உயர்நிலை பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் சீதளா தேவி. இவர் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 1330 குறட்பாக்களையும் வெற்றிலை, மரக்கிளிப், சாக்பீஸ், சோப்பு, மண்பாண்டம், சேலை, பைபர் தட்டு, இந்திய வரைப்படம் சோழி என 9 வகையான பொருட்களில் எழுதி சாதனை படைத்துள்ளார். மேலும் இவர் 11 உலக சாதனை படைத்துள்ளாராம்.
News November 16, 2025
ALERT: செங்கல்பட்டில் கனமழை வெளுக்கும்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (நவ.17) மற்றும் நாளை மறுநாள் (நவ.18) கன முதல் மிககனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் முடிவெடுத்துக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த இரண்டு நாட்களுக்கு முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே! ஷேர் பண்ணுங்க.
News November 16, 2025
செங்கல்பட்டு இரவு ரோந்து பணி காவலர் விவரம்

செங்கல்பட்டு (நவம்பர்-15) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


