News April 23, 2025
நீட் மாதிரி நுழைவுத் தேர்வுக்கு இன்றே கடைசி

பிளஸ் 2 முடித்து மருத்துவ கனவில் உள்ள மாணவர்களுக்காக மதுரையில் தனியார் நாளிதழ் – ஸ்டாரெட்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் நீட் மாதிரி நுழைவுத் தேர்வு மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் ஏப்.27 காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடக்கிறது. இத்தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் 96777 60856 என்ற அலைபேசி எண்ணில் இன்று மாலை (ஏப்.23) 5 மணிக்குள் முன் பதிவு செய்ய வேண்டும்.
Similar News
News December 23, 2025
மதுரை: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <
News December 23, 2025
மதுரை: 19 வயது இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

மதுரை சிந்தாமணி கிழக்கு தெரு ஜெயபால் இவரது மகள் சந்திரலேகா 19, இவர் மதுரையில் உள்ள கல்லூரியில் லேப் டெக்னீசியன் பயிற்சிக்கான உயர் கல்வி பயின்று வந்தார். மதுரை தெற்கு வாசல் பகுதியில் உள்ள லேப் ஒன்றில் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென்று உடல் சோர்வு ஏற்படுவதாக கூறி, வீட்டுக்குச் சென்றவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கீரைத்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 23, 2025
மதுரை: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

மதுரை மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே <


