News November 25, 2024
நீட் தேவை இல்லை என்பதே அனைவரின் கருத்து: அப்பாவு

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளரிடம் கூறுகையில், நீட் தேர்வை தேசிய முகமை நடத்துகிறது என வைத்துக்கொண்டாலும், தமிழ்நாட்டில் உள்ள கல்வி கட்டமைப்பை பிரதிபலிக்கக்கூடிய தேர்வாக உள்ளது. 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் அவர்களது மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்பில் இடம் கொடுத்தால்தான் நியாயமாக இருக்கும். நீட் தேர்வு தேவை இல்லை என்பதே அனைவரது கருத்தாக உள்ளது என்றார்.
Similar News
News November 23, 2025
BREAKING: நெல்லை வந்தடைந்த பேரிடர் மீட்பு படையினர்

நெல்லை மாவட்டத்திற்கு அதிக கன மழை எச்சரிக்கை சென்னை வானிலை ஆய்வு மையத்தின் மூலம் இன்று (நவ.23) விடுக்கப்பட்டுள்ள நிலையில் 25 பேர் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் அதிநவீன உபகரணங்களுடன் தற்போது நெல்லை வந்தடைந்தனர். இன்று காலை முதல் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
News November 23, 2025
நெல்லை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ.24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தென்காசி மற்றும் நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து உத்தரவு . SHARE
News November 23, 2025
நெல்லை: லாரி மோதி இளைஞர் உயிரிழப்பு

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி அருகிலுள்ள பள்ளக்கால் பொதுக்குடி மெயின் ரோட்டை சேர்ந்த குணசேகரன் என்பவருடைய மகன் முருகன் (22) என்பவர் அம்பாசமுத்திரம் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பணஞ்சாடி குளம் அருகே எதிரே வந்த லாரி இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பாப்பாக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


