News September 28, 2024
நீட் தேர்வில் வென்ற மாணவனுக்கு முன்னாள் அமைச்சர் பாராட்டு

சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் வசித்து வரும் சுரேந்தர் என்ற மாணவன் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் 7.5%இல் தேர்ச்சி பெற்று தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். அவருக்கு முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.எ செங்கோட்டையன் அவர்கள் பாராட்டு தெரிவித்தார்.
Similar News
News July 11, 2025
ஈரோடு: 12th முடித்தால் கிராம வங்கியில் வேலை

தமிழகத்தில் NABARD வங்கியின் நிதிச் சேவை நிறுவனத்தில்( NABFINS) CSO( Customer Servive Officer) பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு முன் அனுபவம் தேவையில்லை, 12ஆவது படித்திருந்தாலே போதுமானது. 18 – 33 வயதுக்குட்பட்டவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், உங்களிடம் டூவீலர் இருப்பது அவசியமாகும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News July 11, 2025
ஈரோடு: ரேஷன் கார்டில் மாற்றமா..?

ஈரோடு மாவட்டத்தில் பொதுவிநியோகத்திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம் வரும் ஜூலை 12ஆம் தேதி அனைத்து வட்டங்களிலும் நடைபெறவுள்ளது. இதில் புதிய குடும்ப அட்டை கோருதல், நகல் குடும்பஅட்டை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், கைபேசி எண் மாற்றம் போன்ற கோரிக்கைகளை பொதுமக்கள் மனுவாக கொடுத்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி தெரிவித்துள்ளார்.
News July 11, 2025
சித்தோட்டில் குட்கா விற்றவர் கைது!

ஈரோடு மாவட்டம், சித்தோடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கங்காபுரம் பகுதியில், வெங்கடேசன் என்பவர் நடத்தி வரும் மளிகை கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதை விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு போலீசார் நடத்திய சோதனையில், சுமார் 360 கிராம் எடையுள்ள ஹான்ஸ் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடை உரிமையாளர் மீதும் வழக்குப்பதியப்பட்டது.