News December 4, 2024
நிவாரண பொருட்களை கலெக்டர் அனுப்பி வைத்தார்

பெரம்பலூர் நகர், துறைமங்கலம் நான்கு ரோடு அருகில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், பெறப்பட்ட ரூ.23.50 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் மற்றும் மழைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைத்தார். நிகழ்ச்சியின் போது துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
Similar News
News September 15, 2025
பெரம்பலூர்: நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூர், எசனை ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை (செப்.16) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக, சிறுவாச்சூர், அயிலூர், விளாமுத்தூர், நாட்டார்மங்கலம், குரூர், செட்டிகுளம், ஆலம்பாடி, எசனை, வேப்பந்தட்டை ஆகிய பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT NOW…
News September 15, 2025
பெரம்பலூர்: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் விழா வருகின்ற 20-09-2025 அன்று துரைமங்கலம் பகுதியில் அமைந்துள்ள தனலட்சுமி சீனிவாசன் தனியார் கல்லூரியில் நடைபெற உள்ளது. மேலும் விவரத்திற்கு 04328-296352 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அறிவித்துள்ளார்.
News September 15, 2025
பெரம்பலூர்:உதவித்தொகையுடன் இலவச கணினி பயிற்சி

பெரம்பலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டு கழகம் பெண்களுக்கான இலவச தையல் மற்றும் கணினி பயிற்சி அளிக்கிறது. மேலும், பயிற்சி காலத்தில் ரூ.4,000 முதல் ரூ.12,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள +2 வரை படித்த 18-35 வயதுடையவர்கள், பீல்வாடி சாலையில் இயங்கி வரும் பயிற்சி மையத்திற்கு நேரில் வருமாறு மையத்தின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.