News March 4, 2025
நில அளவை; இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்!

சேலத்தில் உள்ள நில உரிமைதாரர்கள் தங்களது நிலங்களை அளவை செய்ய அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பித்துக்கலாம்.நில அளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி (அ)அலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும்.நில அளவை செய்யப்பட்ட பின்னர், நில அளவர் கையொப்பமிட்ட அறிக்கை/வரைபடம் நில அளவரால் பதிவேற்றம் செய்யப்பட்டு https://eservices.tn.gov.in/ இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் என ஆட்சியர் அறிவிப்பு
Similar News
News November 27, 2025
சேலம்: ஈஸியா பட்டா பெறுவது எப்படி?

சேலம் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)
News November 27, 2025
இளம்பிள்ளை: ஒரு APP-ஆல் பறிபோன 10 லட்சம்!

சேலம், இளம்பிள்ளையை சேர்ந்த பெண் ஒருவர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதில் செல்போனில் RTO APK டவுன்லோட் செய்ததாகவும், தொடர்ந்து அவர்கள் கூறிய வழிமுறையில் சென்றதால், தன்னுடைய வங்கி கணக்கிலிருந்து ரூ.10,78,485 டெபிட் ஆகிவிட்டதாகவும், இழந்த பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும் என்றும் புகார் தெரிவித்துள்ளார்.
News November 27, 2025
கெங்கவெல்லி அருகே நண்பர்கள் 2 பேர் பலி!

கெங்கவெல்லி அருகே தம்மம்பட்டி கோனேரிப்பட்டியை சேர்ந்த நண்பர்கள் ஷாஜகான் மற்றும் அரவிந்த். இருவரும்நேற்று இரவு, கொண்டையம் பள்ளிக்கு பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சென்றனர். கோனேரிப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த போர்வெல் லாரி பின்பகுதியில், பைக்கை மோதியுள்ளனர். இதில் இருவரும் படுகாயம் அடைந்து உயிரிழந்தனர். இதுகுறித்து தம்மம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


