News April 1, 2025
நிலுவைத் தொகை ரூ.36 கோடி வழங்க வலியுறுத்தல்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்கு சிறுபான்மையினர் அமைச்சகத்தால் ரூ.68 கோடி வழங்க முடிவு செய்யப்பட்டு ரூ.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பாக்கித்தொகை ரூ.36 கோடி இதுவரை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனை விரைவில் ஒதுக்கீடு செய்யுமாறு நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் நேற்று வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News April 12, 2025
BREAKING நெல்லையில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் இன்று மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. *உங்கள் பகுதியில் மழை பெய்தால் கமெண்ட் செய்யவும்*
News April 12, 2025
நெல்லையில் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

நெல்லை மாவட்ட வேலை வாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் பெருமாள்புரத்தில் வரும் 17-ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை சிறிய அளவிலான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. முகாமில் கலந்து கொள்ள மாவட்ட கலெக்டர் மரு.இரா.சுகுமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முகாமில் கலந்து கொள்ள இங்கே <
News April 12, 2025
பைக் வீலில் மின்சார வயர் சிக்கி மின்சாரம் தாக்கி பலி

திசையன்விளை அருகே இடையன்குடி யாதவர் வடக்கு தெருவை சேர்ந்தவர் வெண்ணிமலை (48). லோடு தொழிலாளி. இவர் நேற்று (ஏப்.11) காலை தோட்டத்திற்கு வாழைத் தார் வெட்டுவதற்கு சென்றுள்ளார். பைக்கில் சாலையில் சென்று கொண்டிருந்த போது அறுந்து கிடந்த மின் கம்பி மீது அவர் சென்றுள்ளார்.பைக்கின் சக்கரத்தில் மின்கம்பி சிக்கி, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர் .