News April 15, 2024
நிலப் பிரச்சனையில் தாக்குதல், 2 பேர் மீது வழக்கு

கரூர், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் நெப்போலியன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுகாசினி என்பவருக்கும் நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று ஏற்பட்ட தகராறில் சுகாசினி மற்றும் கிருஷ்ணராவ் ஆகியோர் நெப்போலியனை தகாத வார்த்தையால் திட்டி கம்பால் அடித்துள்ளனர். இதுகுறித்து மாயனூர் போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிந்துள்ளனர்.
Similar News
News December 2, 2025
கரூர்: இந்த சான்றிதழ்கள் உங்களிடம் இல்லையா?

உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது இ-பெட்டகம் என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th, கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் எளிமையாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News December 2, 2025
கரூர்: SSC-ல் 25,487 காலிப்பணியிடங்கள்! APPLY NOW

கரூர் மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th Pass
3. கடைசி தேதி : 31.12.2025,
4. சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க<
இத்தகவலை SHARE பண்ணுங்க!
News December 2, 2025
கரூர் துயரம்: கலெக்டர் முக்கிய தகவல்!

செப். 27-ம் தேதி வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க.,பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை சி.பி.ஐ. விசாரணை செய்து வருகிறது. உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு இன்று முதல் மனு பெற தொடங்கும். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்கள் காலை 10:30 மணி முதல் கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள அரசு மாளிகையில் மனு அளிக்கலாம் என கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.


