News September 14, 2024
நிலத்தகராறில் மூதாட்டி அடித்து கொலை

திருவெண்ணெய்நல்லூர் அருகே நிலத்தகராறில் மூதாட்டி நசரம்மாள்(65) என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று நள்ளிரவு ஏற்பட்ட தகராறில் குமரவேல் என்பவர் மூதாட்டி நசரம்மாளை தடியால் தாக்கியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த மூதாட்டியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 15, 2025
திண்டிவனம் சார் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் 72 – திண்டிவனம் சட்டமன்ற தொகுதிக்குக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (நவ.15) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் திண்டிவனம் வாக்காளர் பதிவு அலுவலர் திரு.லூர்துசாமி உட்பட பலர் உள்ளனர்.
News November 15, 2025
சிறுவாடி:வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி

72 – திண்டிவனம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மரக்காணம் வட்டம் சிறுவாடி கிராமத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் /ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (நவ.15) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் திண்டிவனம் வாக்காளர் பதிவு அலுவலர் திரு.லூர்துசாமி, பலர் உள்ளனர்.
News November 15, 2025
விழுப்புரம்:ரயில்வேயில் 3058 காலி பணியிடம் அறிவிப்பு!

விழுப்புரம் மக்களே, இந்திய ரயில்வேயில் டிக்கெட் கிளர்க், ஜூனியர் கிளர்க் போன்ற 3058 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு 12th முடித்து, 18 வயதுக்கு மேல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.19,900 – ரூ.21,700 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் நவ.27ம் தேதிக்குள் <


