News August 4, 2024
நிலச்சரிவின்போது உயிர் தப்பிக்க… (1/2)

நிலச்சரிவு நேரிட்டால் எப்படி தப்பிப்பது, உயிரைக் காப்பது என்பது குறித்து மீட்புப்படையினர் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். அதனை தெரிந்து கொள்ளலாம். நிலச்சரிவு குறித்து முன்னெச்சரிக்கை எதுவும் வந்தால், அதை அலட்சியமாகக்கருதி புறக்கணிக்கக்கூடாது. உடனடியாக அங்கிருந்து
தப்பிச்செல்ல தயாராக இருக்க வேண்டும். அருகில் மணல் சரிவது, மரங்கள் முறியும் சத்தம் கேட்டால் அலட்சியப்படுத்தக்கூடாது.
Similar News
News November 28, 2025
வெனிஸ் அழகை ரசித்த அஜித் பேமிலி (PHOTOS)

அண்மையில் இத்தாலியில் ஜென்டில்மேன் டிரைவர் விருதை, அஜித்துக்கு வழங்கி பிலிப் சாரியட் மோட்டார் ஸ்போர்ட் கௌரவித்திருந்தது. இந்த விருதை பெற அஜித் தனது குடும்பத்துடன் வெனிஸ் சென்ற நிலையில், அந்த போட்டோஸை இப்போது ஷாலினி பகிர்ந்துள்ளார். வெனிஸ் நகரின் அழகியலோடு எடுக்கப்பட்டுள்ள அஜித் பேமிலி போட்டோஸ் கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது. மேலே உள்ள அந்த போட்டோஸை SWIPE செய்து பாருங்கள்.
News November 28, 2025
மருத்துவ காலி பணியிடங்கள்: அன்புமணி Vs மா.சு.,

மருத்துவத்துறையில் 12,000 காலிபணியிடங்கள் இருப்பதாக <<18266345>>அன்புமணி<<>> குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஜீரோ காலி பணியிடங்கள் என்ற வகையில் மருத்துவத்துறை செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். 1.75 லட்சம் பேர் பணிபுரியும் மருத்துவத்துறையில் காலி பணியிடங்கள் எங்கே உள்ளது என்பதை ஆய்வு செய்து காட்டுங்கள் என்றும் சவால் விடுத்துள்ளார்.
News November 28, 2025
பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய காங்., MLA

கேரளா காங்கிரஸ் MLA ராகுல் மம்கூத்ததில் மீது, பாலியல் வன்கொடுமை வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளனர். பெண் ஒருவர் நேரடியாக CM பினராயி விஜயனிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே மலையாள நடிகை உட்பட பல பெண்கள் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தனர். கடந்த ஆகஸ்ட் மாதமே காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.


