News January 2, 2025
நிலக்கடலைக்கு ‘ஜிப்சம்’ இடுவது அவசியம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டையபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் விவசாயிகள் நிலக்கடலை பயிர் செய்கின்றனர். இப்பகுதிகளில் உள்ள நிலங்களில் நுண்ணூட்டச் சத்து குறைவாக இருப்பதால் ஜிப்சம் இடுவதன் மூலம் நிலக்கடலையில் பருமன் ஒரே சீராக இருப்பதுடன், திரட்சியாகவும் மாறுவதற்கு உதவுகிறது என வேளாண்மை துறை விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளது.
Similar News
News November 13, 2025
SIR படிவங்களை நிரப்புவதற்காக சிறப்பு முகாம்

தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள SIR கணக்கெடுப்பில், படிவங்களை விநியோகம் செய்யும் பணி நவ.4 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நவ.11 மாலை 4 மணியளவில் 70% கணக்கெடுப்பு படிவங்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் படிவங்களை நிரப்புவதற்காக நவ.15 & 22 தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும் என தூத்துக்குடி தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
News November 12, 2025
பொட்டலூரணியில் 548-வது நாளாக தொடரும் போராட்டம்..

பொட்டலூரணியை சுற்றியுள்ள மூன்று தனியார் கழிவு மீன் ஆலைகளை உடனடியாக மூடக்கோரியும் பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெறக்கோரியும் இன்று (12.11.2025) தொடர் போராட்டத்தின் 548-ஆம் நாள் கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது..
தமிழக அரசும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொட்டலூரணி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்..
News November 12, 2025
BREAKING தூத்துக்குடி: 11 மாத குழந்தை பலி

தூத்துக்குடி சின்னக்கண்ணுபுரத்தில் உள்ள செல்வநாயகபுரத்தை சேர்ந்தவர்கள் ஆனந்த் ராதா & மகேஸ்வரி தம்பதிகள். இன்று இவர்களது வீட்டின் மேற்கூரை திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் வீட்டிலிருந்த இவர்களின் 11 மாத பெண் குழந்தை பலியானார். தாய் ராதா மகேஸ்வரி பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது பற்றி சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


